14 ஏசாயாவின் இறைவாக்கு இவ்வாறு அவர்களில் நிறைவேறியது:
" ‘நீங்கள் எப்பொழுதும் காதாரக் கேட்டும் ஒருபோதும் உணரமாட்டீர்கள்;
நீங்கள் எப்பொழுதும் கண்ணாரக் கண்டும் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள்.
15 ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது;
அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள்,
தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும்,
தங்கள் காதுகளால் கேட்காமலும்,
தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்;
நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’13:15 ஏசா. 6:9,10 எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்.