3 அதற்கு இயேசு அவர்களிடம், "உங்களுடைய பாரம்பரிய முறைகளின் நிமித்தம், நீங்கள் ஏன் இறைவனின் கட்டளைகளை மீறுகிறீர்கள்? 4 ஏனெனில், ‘உனது தகப்பனையும், தாயையும் கனம்பண்ணுவாயாக’15:4 யாத். 20:12; உபா. 5:16 என்றும், ‘தனது தகப்பனையோ, தாயையோ சபித்தால், அவன் கொல்லப்படவேண்டும்’15:4 யாத். 21:17; லேவி. 20:9 என்றும், இறைவன் சொன்னாரே.