37 இயேசு அவனுக்குப் பதிலாக, "உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக.22:37 உபா. 6:5 38 இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை. 39 இரண்டாவதும் இதைப் போன்றதே: நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல, உன் அயலானிலும் அன்பாய் இரு.22:39 லேவி. 19:18