பேதுரு மறுதலிக்கப் போவதை இயேசு முன்னறிவித்தல்
31 அப்பொழுது இயேசு அவர்களிடம், "இந்த இரவிலேயே நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில்,
" ‘நான் மேய்ப்பனை அடித்து வீழ்த்துவேன்.
அப்பொழுது மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும்,’26:31 சக. 13:7
என்று எழுதியிருக்கிறது.