Pular para o conteúdo
Publicidade

நாகூம் 3:8-10

OTCVTAM Indian Tamil Contemporary Version

8 நைல் நதிக்கருகில் அமைந்திருக்கிறதும்,

நீரால் சூழப்பட்டதுமான நோ அம்மோன் பட்டணத்தைப் பார்க்கிலும்,

நினிவேயே நீ சிறந்தவளோ?

நதியானது நோ அம்மோனுக்குப் பாதுகாப்பாகவும்,

தண்ணீர் அவளுக்கு மதிலாகவும் இருந்தன.

9 அவளுக்கு எத்தியோப்பியாவும், எகிப்தும் அளவற்ற வல்லமையாய் இருந்தன.

பூத்தும் லிபியாவும் அவளுக்கு நட்பு நாடுகளாயிருந்தன.

10 ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறைபிடிக்கப்பட்டு,

நாடுகடத்தப்பட்டாள்.

அவளுடைய பிள்ளைகளோ ஒவ்வொரு வீதிச்சந்தியிலும்,

அடித்து நொறுக்கப்பட்டார்கள்.

அவளது உயர் குடிமக்களுக்காக அசீரிய வீரர்களால் சீட்டுகள் போடப்பட்டன.

அவளின் பெரிய மனிதர் சங்கிலிகளால் கட்டப்பட்டு

அடிமைகளாகக் கொண்டுபோகப்பட்டார்கள்.

Em outras traduções

  1. IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

    8 நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப் 3:8 எகிப்தின் தலைநகரம்பார்க்கிலும் நீ சிறப்பானவனோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் பாதுகாப்பும், சமுத்திரத்தில் இணையும் ஆறுகள் அதின் மதிலுமாயிருந்தன. 9 எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணமுடியாத படையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லிபியாவும் அதற்கு உதவியாயிருந்தது. 10 ஆயினும் அவள் குடியிருக்கக் கூடாதென்று சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவளுடைய குழந்தைகள் எல்லா வீதிகளின் முனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள் பெயரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லோரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.

Naum
Ver todos os capítulos de Naum