24 அவள் சிறந்த பட்டாடைகளை நெய்து அவற்றை விற்கிறாள்,
அவள் இடைக் கச்சைகளையும் செய்து வியாபாரிகளுக்கு விநியோகம் செய்கிறாள்.
25 அவள் பெலத்தையும் கவுரவத்தையும் உடுத்தியிருக்கிறாள்;
வருங்காலத்தை மகிழ்வுடன் எதிர்நோக்குகிறாள்.
26 அவள் ஞானமாய்ப் பேசுகிறாள்,
அவளுடைய நாவில் தயவான அறிவுரைகள் இருக்கின்றன.
27 அவள் தன் வீட்டுக் காரியங்கள்மேல் எப்போதும் அக்கறையாயிருக்கிறாள்;
அவள் சோம்பலாயிருந்து உணவுக்காக எதிர்பார்த்து இருப்பதில்லை.