18 உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக,
நீ உனது வாலிப காலத்தின் மனைவியுடன் மகிழ்ந்திருப்பாயாக.
19 அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக,
அவளுடைய மார்பகங்களே எந்நாளும் உன்னைத் திருப்தியாக்கட்டும்;
அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் கவரப்படுவாயாக.
20 என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்?
இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்?