32 ஆனால் விபசாரம் செய்பவனோ சுத்த முட்டாள்;
அப்படிச் செய்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.
33 அடிபட்ட காயமும் அவமானமும் அவனுடைய பங்கு;
அவனுடைய வெட்கம் ஒருபோதும் நீங்காது.
34 ஏனெனில் பொறாமை கணவனின் மூர்க்கத்தைத் தூண்டும்;
பழிவாங்கும் நாளில் அவன் இரக்கம் காட்டமாட்டான்.
35 அவன் எவ்வித இழப்பீட்டையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்;
எவ்வளவு பெரிய இலஞ்சமானாலும், அவன் அதை வாங்க மறுப்பான்.