இறைவனைப் புகழ்தல்
33 ஆ, இறைவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவற்றின் நிறைவு எவ்வளவு ஆழமானது!
அவருடைய தீர்ப்புகள் ஆராய்ந்து அறியமுடியாதவை,
அவருடைய வழிமுறைகளோ விளங்கிக்கொள்ள முடியாதவை.
34 "கர்த்தருடைய மனதை அறிந்தவன் யார்?
அவருக்கு ஆலோசகனாய் இருந்தவன் யார்?"11:34 ஏசா. 40:13
35 "இறைவன் தனக்குப் பலனைக் கொடுக்கும்படி யார் முன்னதாகவே
இறைவனுக்குக் கொடுத்திருக்கிறான்?"11:35 யோபு 41:11
36 எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன.
அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.