9 "விபசாரம் செய்யாதே," "கொலை செய்யாதே," "களவு செய்யாதே," "அயலானுடையதை அபகரிக்க ஆசைகொள்ளாதே,"13:9 யாத். 20:13-14; உபா. 5:17-19,21 என்கிற கட்டளைகளும், வேறு கட்டளைகளும் கொடுக்கப்பட்டிருந்தாலும், இவையெல்லாம், "நீ உன்னில் அன்பாயிருப்பதுபோல் உன் அயலவனிலும் அன்பாயிரு"13:9 லேவி. 19:18 என்கிற ஒரே கட்டளையில் அடங்குகின்றன.