Adoração
A adoração é a resposta do coração humano à majestade de Deus. Deus é Espírito e importa que os que o adoram o adorem em espírito e em verdade — com todo o ser.
Adorar em espírito
Deus é Espírito e importa que os adoradores o adorem em espírito e em verdade. A adoração verdadeira brota do coração.
இறைவன் ஆவியாயிருக்கிறார். அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியிலும் உண்மையிலும் அவரை ஆராதிக்க வேண்டும்" என்றார்.
ஆனால் ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. உண்மையாய் ஆராதிக்கிறவர்கள், அப்பொழுது பிதாவை ஆவியிலும் உண்மையிலும் ஆராதிப்பார்கள். ஏனெனில் அவ்விதம் தன்னை ஆராதிக்கிறவர்களையே பிதா தேடுகிறார். இறைவன் ஆவியாயிருக்கிறார். அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியிலும் உண்மையிலும் அவரை ஆராதிக்க வேண்டும்" என்றார்.
அதற்கு இயேசு: "அம்மா, நீ என்னை நம்பு; நீங்கள் பிதாவை இந்த மலையிலும், எருசலேமிலும் வழிபடாத காலம் வருகிறது. சமாரியராகிய நீங்களோ அறியாததையே ஆராதிக்கிறீர்கள்; யூதர்களாகிய நாங்களோ அறிந்திருப்பவரையே ஆராதிக்கிறோம். ஏனெனில் யூதரிடமிருந்தே இரட்சிப்பு வருகிறது. ஆனால் ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. உண்மையாய் ஆராதிக்கிறவர்கள், அப்பொழுது பிதாவை ஆவியிலும் உண்மையிலும் ஆராதிப்பார்கள். ஏனெனில் அவ்விதம் தன்னை ஆராதிக்கிறவர்களையே பிதா தேடுகிறார்.
அதற்கு அவன், "ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்" என்று சொல்லி, அவரை வழிபட்டான்.
இயேசு அவனிடம், "சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ! ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ " என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னார்.
அதற்கு இயேசு, " ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ என்று எழுதியிருக்கிறதே" என்று பதிலளித்தார்.
உயிருள்ள பலிகள்
ஆகையால், எனக்கு பிரியமானவர்களே, நான் இறைவனுடைய இரக்கத்தை மனதிற்கொண்டு, உங்களை வருந்தி வேண்டிக்கொள்கிறதாவது, உங்கள் உடல்களை உயிருள்ள பலியாகவும், பரிசுத்தமும், இறைவனுக்குப் பிரியமாயிருக்கும்படி ஒப்புக்கொடுங்கள். இதுவே உங்களுடைய உண்மையான ஆவிக்குரிய வழிபாடு.
உயிருள்ள பலிகள்
ஆகையால், எனக்கு பிரியமானவர்களே, நான் இறைவனுடைய இரக்கத்தை மனதிற்கொண்டு, உங்களை வருந்தி வேண்டிக்கொள்கிறதாவது, உங்கள் உடல்களை உயிருள்ள பலியாகவும், பரிசுத்தமும், இறைவனுக்குப் பிரியமாயிருக்கும்படி ஒப்புக்கொடுங்கள். இதுவே உங்களுடைய உண்மையான ஆவிக்குரிய வழிபாடு. இனிமேலும் இந்த உலகத்தின் மாதிரிகளுக்கு ஒத்து நடவாதேயுங்கள். இறைவனால் உங்கள் மனங்களில் ஆழமாக புதுப்பிக்கப்பட்டு, உங்கள் இயல்பில் மாறுதல் அடையுங்கள். அப்பொழுதே நீங்கள் சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகிறதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் அறிந்துகொள்வீர்கள்.
எல்லாம் அவரிடமிருந்தே, அவர் மூலமாகவும், அவருக்காகவுமே இருக்கின்றன.
அவருக்கே என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக! ஆமென்.
எழுதப்பட்டிருக்கிறபடியே:
" ‘நான் வாழ்வது நிச்சயம்போலவே,
ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக முடங்கும்;
ஒவ்வொரு நாவும் இறைவனை அறிக்கையிடும் என்பதும் நிச்சயம்’ "
என்று கர்த்தர் சொல்கிறார்.
Louvor e reverência
Vinde, adoremos e prostremo-nos. Louvai ao Senhor! Todo ser que respira louve o nome glorioso do Senhor.
வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக
நாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்;
நாம் முழங்காலிடுவோம்.
வாருங்கள், நம்மை உண்டாக்கின யெகோவாவுக்கு முன்பாக
நாம் குனிந்து, பணிந்து, வழிபடுவோம்;
நாம் முழங்காலிடுவோம்.
அல்லேலூயா,
இறைவனை அவருடைய பரிசுத்த இடத்தில் துதியுங்கள்;
அவருடைய வல்லமை வெளிப்படும் வானங்களில் அவரைத் துதியுங்கள்.
அவருடைய வல்லமையின் செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்;
இணையற்ற அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
எக்காள சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்;
யாழோடும், வீணையோடும் அவரைத் துதியுங்கள்.
தம்புராவுடன் நடனமாடி அவரைத் துதியுங்கள்;
கம்பியிசைக் கருவிகளினாலும், புல்லாங்குழலினாலும் அவரைத் துதியுங்கள்.
கைத்தாளங்களின் ஓசையுடன் அவரைத் துதியுங்கள்;
அதிர்ந்து ஒலிக்கும் கைத்தாளங்களுடன் அவரைத் துதியுங்கள்.
சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.
அல்லேலூயா.
சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.
அல்லேலூயா.
அவருடைய வாசல்களில் நன்றியோடும்,
அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள்
அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.
யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்;
பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.
பூமியிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் சந்தோஷத்துடன்
இறைவனை ஆர்ப்பரித்துத் துதியுங்கள்!
அவருடைய பெயரின் மகிமையைப் பாடுங்கள்;
அவருடைய துதியை மகிமையுள்ளதாக்குங்கள்.
இறைவனிடம் சொல்லுங்கள், "உமது செயல்கள் எவ்வளவு பிரமிக்கத்தக்கவை!
உமது வல்லமை பெரிதானது;
அதினால் பகைவர்கள் உமக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்.
பூமியிலுள்ள அனைவரும் உம்மைப் பணிந்து வழிபடுகிறார்கள்;
அவர்கள் உமக்குத் துதி பாடுகிறார்கள்,
அவர்கள் உமது பெயருக்குத் துதி பாடுகிறார்கள்."
நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்;
அவருடைய துதி என் நாவில் இருந்தது.
யெகோவாவே, நீர் உண்டாக்கிய எல்லா நாட்டு மக்களும்
உமக்கு முன்பாக வந்து வழிபடுவார்கள்;
அவர்கள் உமது பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவார்கள்.
நீர் பெரியவராய் இருக்கிறீர், மகத்துவமான செயல்களைச் செய்கிறீர்;
நீர் ஒருவரே இறைவன்.
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி;
என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த பெயரைத் துதி.
யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்;
அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள்.
இறைவனே, நீரே என் இறைவன்,
நான் ஆர்வத்துடன் உம்மைத் தேடுகிறேன்;
தண்ணீரில்லாமல் வறண்டதும்,
காய்ந்ததுமான நிலத்திலே
என் ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது,
என் உடலோ உமக்காக ஏங்குகிறது.
உமது உடன்படிக்கையின் அன்பு உயிரைப் பார்க்கிலும் சிறந்தது;
ஆகையால் என் உதடுகள் உம்மை மகிமைப்படுத்தும்.
நான் உயிருடன் இருக்கும்வரை உம்மைத் துதிப்பேன்;
ஜெபத்தில் உமது பெயரைச் சொல்லி என் கைகளை உயர்த்துவேன்.
Declarações de adoração
Tu és digno, Senhor, de receber glória e honra! Ao Senhor pertence a grandeza, o poder, a glória e a majestade.
"எங்கள் இறைவனாகிய கர்த்தாவே,
மகிமையையும் கனத்தையும்
வல்லமையையும் பெற்றுக்கொள்வதற்கு நீர் தகுதியுள்ளவரே.
ஏனெனில், நீரே எல்லாவற்றையும் படைத்தீர்.
உம்முடைய சித்தத்தினாலேயே, அவைகள் எல்லாம் படைக்கப்பட்டு உயிர் வாழ்கின்றன"
என்று பாடினார்கள்.
அவன் உரத்த குரலில், "இறைவனுக்கு பயப்படுங்கள், அவருக்கே மகிமையைக் கொடுங்கள். ஏனெனில், அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் வேளை வந்துவிட்டது. வானங்களையும், பூமியையும், கடலையும், நீரூற்றுகளையும் படைத்தவரையே ஆராதனை செய்யுங்கள்" என்று சொன்னான்.
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமல் இருப்பார்கள்?
யார் உமது பெயருக்கு மகிமையைக் கொடுக்காமலும் இருப்பார்கள்?
ஏனெனில், நீர் ஒருவரே பரிசுத்தர்.
எல்லா நாட்டினரும் வந்து உமக்கு முன்பாக
ஆராதனை செய்வார்கள்,
ஏனெனில், உமது நீதியான செயல்கள் வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன."
யோவானாகிய நானே, இந்த வார்த்தைகளைக் கேட்டேன். இந்தக் காரியங்களைக் கண்டேன். நான் இவைகளைக் கண்டு, கேட்டபோது, இவற்றை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி, அவனுடைய பாதத்தில் விழுந்தேன். ஆனால் அவனோ என்னிடம், "இப்படிச் செய்யாதே! உன்னுடனும், உன் சகோதரர்களான இறைவாக்கினருடனும், இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிற எல்லோருடனும், நானும் உடன் ஊழியன். ஆகையால், இறைவனையே ஆராதனைசெய்" என்றான்.
யெகோவாவே, மேன்மையும், வல்லமையும்,
மகிமையும், மாட்சிமையும், சிறப்பும் உம்முடையதே.
வானத்திலும், பூமியிலும் உள்ள அனைத்தும் உம்முடையதே.
யெகோவாவே! அரசாட்சியும் உம்முடையதே.
நீர் எல்லாவற்றிற்கும் தலைவராக உயர்த்தப்பட்டிருக்கிறீர்.
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்.
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
"இறைவனே, எங்கள் இரட்சகரே, எங்களைக் காப்பாற்றும்;
பிற நாடுகளிடமிருந்து எங்களை விடுவித்து சேர்த்துக்கொள்ளும்.
அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி,
உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம்" என்று சொல்லுங்கள்.
இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு
நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் துதி உண்டாகட்டும்.
அப்பொழுது எல்லா மக்களும், "ஆமென், யெகோவாவுக்கு துதி உண்டாவதாக" என்று சொன்னார்கள்.
யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர்.
அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
அவரைப் பாடுங்கள். அவருக்குத் துதி பாடுங்கள்;
அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.
அதனாலே இறைவன் அவரை மிக மேலான இடத்திற்கு உயர்த்தி,
எல்லாப் பெயர்களையும்விட உன்னதமான பெயரை அவருக்குக் கொடுத்தார்.
அதனால் இயேசுவின் பெயருக்கு ஒவ்வொரு முழங்காலும் முடங்கும்.
பரலோகத்திலும் பூமியிலும் பூமியின்கீழும் உள்ளவர்களின்
எல்லா முழங்கால்களும் முடங்கும்.
பிதாவாகிய இறைவனுக்கு மகிமை உண்டாகும்படி,
ஒவ்வொரு நாவும் இயேசுகிறிஸ்துவே கர்த்தர் என்று அறிக்கையிடும்.
Sacrifício de louvor
Por meio de Jesus ofereçamos sempre sacrifício de louvor. Cantai ao Senhor, celebrai em salmos — enchei-vos do Espírito.
ஆகவே இயேசுவின் மூலமாய் இறைவனுடைய பெயரை அறிக்கையிடுகிற உதடுகளின் கனியை, துதியின் காணிக்கையாக இறைவனுக்கு இடைவிடாது செலுத்துவோமாக.
ஆகவே, அசைக்கப்படாத ஒரு அரசையே பெறுகிறவர்களாகிய நாம் நன்றியுடையவர்களாய், இறைவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில், பயபக்தியுடன், ஆராதிப்போம். ஏனெனில், நமது இறைவனோ சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்கிறார்.
சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவரோடொருவர் பேசி, உங்கள் உள்ளத்திலே இசைபாடி கர்த்தரைப் போற்றுங்கள்.
கிறிஸ்துவின் வார்த்தை உங்களுக்குள் எல்லா ஞானத்தோடும் நிறைவாய் குடியிருக்கட்டும். சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவருக்கொருவர் போதித்து, அறிவுரை கூறி, உங்கள் இருதயங்களில் இறைவனுக்கு நன்றியுடன் பாடி,
கிட்டத்தட்ட நடு இரவில் பவுலும் சீலாவும் மன்றாடிக்கொண்டும், இறைவனுக்குப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தார்கள். மற்ற சிறைக் கைதிகள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஆறுதலின் இறைவன்
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும், இறைவனுமானவருக்குத் துதி உண்டாவதாக; அவர் இரக்கத்தின் பிதாவும் எல்லா விதமான ஆறுதலின் இறைவனுமாயிருக்கிறார். அவரே நம்மை நம்முடைய எல்லாக் கஷ்டங்களிலும் ஆறுதல்படுத்துகிறார். எனவே நாம் இறைவனிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆறுதலினாலே, பல்வேறு கஷ்டங்களில் உள்ளவர்களை, எங்களால் ஆறுதல்படுத்தக் கூடியதாயிருக்கிறது.
நீங்களும் எங்களுடன்கூட ஐக்கியம் வைத்துக்கொள்வதற்காக, நாங்கள் கண்டதையும் கேட்டதையும் உங்களுக்கு அறிவிக்கிறோம். எங்களுடைய ஐக்கியமோ, பிதாவோடும் அவருடைய மகனாகிய இயேசுகிறிஸ்துவோடுமே இருக்கிறது.
Adoração como vida
Exaltai ao Senhor, prostrai-vos ante o escabelo dos seus pés. A adoração genuína transforma o adorador e agrada o Criador.
நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி,
அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்;
அவர் பரிசுத்தமானவர்.
நாள்முழுவதும் உம்முடைய மகத்துவத்தை அறிவித்து,
என் வாய் உமது துதியினால் நிறைந்திருக்கிறது.
இறைவனைப் பாடுங்கள், அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள்;
மேகங்களில் ஏறிப் போகிறவரை புகழ்ந்து உயர்த்துங்கள்;
யெகோவா என்பது அவருடைய பெயர்; அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.
இறைவன் தமது பரிசுத்த வாழ்விடத்தில்
தகப்பன் இல்லாதவர்களுக்குத் தகப்பனாகவும்
விதவைகளுக்கு பாதுகாவலராகவும் இருக்கிறார்.
யெகோவாவினுடைய நீதியினிமித்தம் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்;
மகா உன்னதமான யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து பாடுவேன்.
அப்பொழுது நான் என் ஜனங்களுக்கு உம்முடைய பெயரை அறிவிப்பேன்,
திருச்சபையில் நான் உம்மைத் துதிப்பேன்.
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்;
யாக்கோபின் சந்ததிகளே, நீங்கள் அனைவரும் அவரைக் கனம்பண்ணுங்கள்;
இஸ்ரயேலின் சந்ததிகளே, நீங்கள் அவரிடத்தில் பயபக்தியாய் இருங்கள்.
நான் உம்மை நோக்கி என் கைகளை விரிக்கிறேன்;
வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகம் கொண்டிருக்கிறது.
என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்?
நீ ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்?
இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு;
நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக
இன்னும் அவரைத் துதிப்பேன்.
நான் யெகோவாவிடம், "நீரே என் யெகோவா;
உம்மைத்தவிர என்னிடம் ஒரு நன்மையும் இல்லை" என்று சொன்னேன்.
பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள்,
நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள்.
நான் மகிழ்ந்து உம்மில் களிகூருவேன்;
மகா உன்னதமானவரே, உமது பெயருக்குத் துதி பாடுவேன்.
Falsa adoração
Não terás outros deuses diante de mim. Não adorarás ídolos. A adoração exclusiva ao Senhor é mandamento inegociável.
நீ அவற்றை வணங்கவோ வழிபடவோ வேண்டாம். ஏனெனில், உன் இறைவனான யெகோவாவாகிய நான் எனக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன். என்னை வெறுக்கிறவர்கள் மத்தியில் பெற்றோரின் பாவத்திற்காக மூன்றாம், நான்காம் தலைமுறை மட்டும் அவர்களுடைய பிள்ளைகளைத் தண்டிக்கிறவராயும் இருக்கிறேன்.
நீ வேறெந்த தெய்வத்தையும் வணங்காதே. வைராக்கியமுடையவர் என்ற பெயருடைய யெகோவா, தமக்குரிய வழிபாட்டைக் குறித்து வைராக்கியமுடைய இறைவன்.
மோசே கூடாரத்திற்குள் போனதும், மேகத்தூண் கீழே இறங்கி, வாசலில் வந்து நிற்கும். அப்பொழுது யெகோவா மோசேயுடன் பேசுவார். மேகத்தூண் கூடாரவாசலில் நிற்பதை மக்கள் காணும்போதெல்லாம், எல்லோரும் தங்களுடைய கூடாரவாசலில் நின்று வழிபடுவார்கள்.
"யெகோவா என் பெலனும், என் பாடலுமாயிருக்கிறார்,
அவரே என் இரட்சிப்புமானார்.
அவர் என் இறைவன், அவரைத் துதிப்பேன்.
அவர் என் தந்தையின் இறைவன், அவரை நான் உயர்த்துவேன்.
யெகோவாவே, தெய்வங்களுக்குள்
உம்மைப்போல் யார் உண்டு?
பரிசுத்தத்தில் மாட்சிமையும்,
மகிமையில் வியக்கத்தக்கவரும்,
அதிசயங்களையும் செய்கிற
உம்மைப்போல் யார் உண்டு?
நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவையே வழிபடுங்கள், அவருடைய ஆசீர்வாதம் உங்கள் உணவிலும், தண்ணீரிலும் இருக்கும். உங்களிடமிருந்து நோயை நீக்கிவிடுவேன்.
அவரே உங்கள் புகழ்ச்சி; உங்கள் கண்களால் கண்ட மகத்துவமும் பயங்கரமான அதிசயங்களைச் செய்த உங்களுடைய இறைவன் அவரே.
அங்கே உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குமுன், நீங்களும் உங்கள் குடும்பங்களும் சாப்பிட்டு, நீங்கள் கையிட்டுச் செய்த எல்லாவற்றையும் குறித்து மகிழ்வீர்கள். ஏனெனில் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்.
இஸ்ரயேலர் அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி யெகோவாவுக்கு எரிச்சல்மூட்டி,
தங்கள் அருவருப்பான விக்கிரகங்களால் அவருக்குக் கோபம் உண்டாக்கினார்கள்.
அவர்கள் பேய்களுக்குப் பலி செலுத்தினார்கள். அவை இறைவன் அல்ல.
அவர்கள் முன்பு அறிந்திராத தெய்வங்களே அவை.
சமீபத்தில் தோன்றியதும்,
உங்கள் முற்பிதாக்கள் பயப்படாததுமான தெய்வங்கள்.
உங்களை உருவாக்கிய கற்பாறையைக் கைவிட்டு விட்டீர்கள்.
உங்களைப் பெற்றெடுத்த இறைவனையும் மறந்துபோனீர்கள்.
நீங்கள் வேறு தெய்வங்கள் பக்கம் திரும்பி, அவற்றை வழிபட்டு, அவர்களை வணங்குமாறு உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாதபடி கவனமாயிருங்கள்.
எனவே யெகோவா சொல்கிறார்:
"இந்த மக்கள் தங்கள் வாயின் வார்த்தைகளினால் என்னைக் கிட்டிச் சேருகிறார்கள்;
தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்.
ஆனால் அவர்களுடைய இருதயங்களோ எனக்கு வெகுதூரமாய் இருக்கின்றன.
அவர்கள் எனக்குச் செய்யும் வழிபாடு
மனிதர்களால் போதிக்கப்பட்ட சட்டங்களாகவே இருக்கின்றன.
யெகோவாவுக்குத் துதி
யெகோவாவே, நீரே என் இறைவன்;
நான் உம்மைப் புகழ்ந்துயர்த்தி, உமது பெயரைத் துதிப்பேன்.
அற்புதமான செயல்களைச் செய்திருக்கிறீர்;
நீர் பூர்வகாலத்தில் அவைகளை திட்டமிட்டபடி,
பரிபூரண உண்மையுடன் நிறைவேற்றியுள்ளீர்.
அதனால் இறைவன் அவர்களைவிட்டு விலகி, வான மண்டலத்திலுள்ள சூரிய, சந்திர, நட்சத்திரங்களை வணங்கும்படி அவர்களை விட்டுவிட்டார். இது இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறதற்கு ஒத்திருக்கின்றது:
"இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாக நீங்கள் இருந்தபோது,
எனக்கு பலிகளையும் காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ?
நீங்கள் மோளேக் தெய்வத்தின் கூடாரத்தையும்,
உங்கள் ரெம்பான் தெய்வத்தின் நட்சத்திரத்தையும் தூக்கித்திரிந்தீர்களே.
இவைகளெல்லாம் நீங்கள் வணங்கும்படி செய்துகொண்ட விக்கிரகங்களே.
எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கு அப்பால் நாடுகடத்தும்படி (எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்) அனுப்புவேன்.
பொய்யான தாழ்மையிலும், இறைவனின் தூதர்களை ஆராதனை செய்வதிலும் மகிழ்கிற அவர்களால், நீங்கள் உங்கள் வெகுமதியைப் பெற்றுக்கொள்வதை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்டவன் தான் கண்ட தரிசனங்களைக்குறித்து, அதிகமாய் விவரித்துச் சொல்கிறான். ஆவிக்குரிய தன்மையற்ற அவனுடைய மனம் வீணான சிந்தனைகளில் பெருமைகொள்கிறது. இப்படிப்பட்டவன் தலையாகிய கிறிஸ்துவிலிருந்து தொடர்பை இழந்துவிட்டான். அவரிடமிருந்தே மூட்டுக்களினாலும் தசைநார்களினாலும் தாங்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கிற முழு உடலும், இறைவன் வளர்ச்சியைக் கொடுக்க, அது வளர்ச்சியைப் பெறுகிறது.
யாராவது உங்களை எவ்வகையிலும் ஏமாற்றுவதற்கு சிறிதளவும் இடங்கொடுக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுக்கெதிரான பெரும் கலகம் ஏற்பட்டு, அக்கிரம மனிதன் வெளிப்படும்வரைக்கும், அந்த நாள் வராது; அந்த மனிதனே அழிவுக்கு நியமிக்கப்பட்டவன். அவன் இறைவன் என்று சொல்லப்படும் எல்லாவற்றிற்கும், வழிபாட்டுக்குரியவைகள் எல்லாவற்றிற்கும் எதிர்த்து நிற்பான். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவன் தன்னை உயர்த்துவான். இதனால், இறைவனின் ஆலயத்தில் தேவன்போல அமர்த்திக்கொண்டு, தன்னையே இறைவன் என்று பிரசித்தப்படுத்துவான்.
Exemplos de adoração
Jó adorou em meio ao sofrimento. Esdras adorou na restauração. Paulo e Silas adoraram na prisão — e Deus respondeu.
அப்பொழுது யோபு எழுந்து, துக்கத்தில் தன் மேலாடையைக் கிழித்து, தலையை மொட்டையடித்து, தரையில் விழுந்து வணங்கி சொன்னதாவது:
"என் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தேன்;
நிர்வாணியாகவே திரும்புவேன்.
யெகோவா கொடுத்தார், யெகோவா எடுத்துக்கொண்டார்;
யெகோவாவின் பெயர் துதிக்கப்படுவதாக."
அவர்கள் யெகோவாவுக்குத் துதியும், நன்றியும் செலுத்திப் பாட்டு பாடினார்கள். அவர்கள்:
"அவர் நல்லவர்;
இஸ்ரயேலின்மேல் அவர் வைத்திருக்கும் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது"
என்று பாடினார்கள்.
மக்கள் எல்லோரும் யெகோவாவின் ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்டதால் உரத்த சத்தமாய் யெகோவாவைத் துதித்தார்கள்.
இப்பொழுது நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோக அரசரைத் துதித்து மேன்மைப்படுத்தி, மகிமைப்படுத்துகிறேன். ஏனெனில் அவர் செய்வதெல்லாம் நியாயமும், அவர் வழிகளெல்லாம் நீதியுமானவை; அவர் பெருமையில் நடப்பவர்களைத் தாழ்த்த வல்லவராயிருக்கிறார்.
"ஆண்டவராகிய யெகோவாவே! நீரே பெரியவர்; உம்மைப்போல் யாரும் இல்லை. எங்கள் காதுகளால் நாங்கள் கேள்விப்பட்டதுபோல் உம்மைத்தவிர வேறொரு இறைவனும் இல்லை.
"யெகோவாவைப்போல் பரிசுத்தமானவர் ஒருவரும் இல்லை;
எங்கள் இறைவனைப்போல் கற்பாறையும் இல்லை,
உம்மைவிட வேறு ஒருவரும் இல்லை.
அதன்பின் லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா ஆகியோர் மக்களைப் பார்த்து, "நீங்கள் எழுந்து நின்று, நித்தியத்திலிருந்து நித்தியம்வரை இருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவாவைத் துதியுங்கள்" என்றார்கள்.
அப்பொழுது அவர்கள் எழுந்து நின்று சொன்னதாவது: "மகிமையுள்ள உமது பெயர் துதிக்கப்படுவதாக; அது எல்லா ஆசீர்வாதத்திற்கும், துதிக்கும் மேலாய் உயர்த்தப்படுவதாக.
அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்,
திராட்சைக்கொடிகளில் பழங்கள் இல்லாமல் போனாலும்,
ஒலிவமரம் பலன் அற்றுப்போனாலும்,
வயல்கள் தானியத்தை விளைவியாமல் போனாலும்,
ஆட்டுத் தொழுவத்திலே செம்மறியாடுகள் இல்லாமல் போனாலும்,
மாட்டுத் தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும்,
நானோ என் யெகோவாவிடம் மகிழ்ந்திருப்பேன்,
என் இரட்சகராகிய இறைவனில் களிகூருவேன்.
அப்பொழுது நீங்கள் என்னை நோக்கிக் கூப்பிட்டு, என்னிடம் வந்து மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.
இறைவனுக்கு அருகில் வாருங்கள், அவரும் உங்களருகே வருவார். பாவிகளே, உங்கள் கைகளைக் கழுவுங்கள். இருமனம் உள்ளவர்களே, உங்கள் இருதயங்களைச் சுத்திகரித்துக் கொள்ளுங்கள்.