O adultério
O adultério é pecado grave que destrói alianças, famílias e vidas. A Bíblia condena firmemente a infidelidade conjugal e chama à pureza, fidelidade e santidade no casamento.
A lei de Deus
Não adulterarás. Quem comete adultério destrói a própria alma. A Palavra de Deus é clara e direta sobre este pecado.
விபசாரம் செய்யவேண்டாம்.
" ‘ஒருவன் தன் அயலானாகிய ஒருவனுடைய மனைவியோடே விபசாரம் பண்ணினால், அவனும் விபசாரியுமான, அந்த இருவருமே கொல்லப்படவேண்டும்.
" ‘உங்கள் அயலானின் மனைவியுடன் பாலுறவுகொண்டு அவளால் உங்களை அசுத்தப்படுத்த வேண்டாம்.
ஆனால் விபசாரம் செய்பவனோ சுத்த முட்டாள்;
அப்படிச் செய்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.
ஆனால் விபசாரம் செய்பவனோ சுத்த முட்டாள்;
அப்படிச் செய்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.
அடிபட்ட காயமும் அவமானமும் அவனுடைய பங்கு;
அவனுடைய வெட்கம் ஒருபோதும் நீங்காது.
ஏனெனில் பொறாமை கணவனின் மூர்க்கத்தைத் தூண்டும்;
பழிவாங்கும் நாளில் அவன் இரக்கம் காட்டமாட்டான்.
அவன் எவ்வித இழப்பீட்டையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்;
எவ்வளவு பெரிய இலஞ்சமானாலும், அவன் அதை வாங்க மறுப்பான்.
ஒருவன் தன் உடைகள் எரியாமல்
தன் மடியில் நெருப்பை அள்ளி எடுக்கமுடியுமோ?
அல்லது தனது பாதங்கள் எரியாதபடி,
ஒருவனால் நெருப்புத்தழலில் நடக்க முடியுமோ?
அவ்வாறே இன்னொருவனின் மனைவியுடன் உறவுகொள்பவனும் இருக்கிறான்;
அவளைத் தொடுபவன் எவனும் தண்டனை பெறாமல் தப்பமாட்டான்.
Jesus ensina
Quem olhar para uma mulher com intenção impura já adulterou no coração. Jesus elevou o padrão da pureza.
விபசாரம் செய்யாதே
" ‘விபசாரம் செய்யாதே’ எனச் சொல்லப்பட்டிருப்பதை, நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது ஒருவன் ஒரு பெண்ணைக் காம இச்சையுடன் பார்த்தாலே, அவன் அவளுடன் அப்போதே தன் இருதயத்தில் விபசாரம் செய்தவனாகிறான்.
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் யாராவது ஒருவன், தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் அவளை விவாகரத்து செய்தால், அவன் அவளை விபசாரத்துக்குள்ளாக்குகிறான். விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்பவனும் விபசாரம் செய்கிறான்.
ஏனெனில் இருதயத்திலிருந்தே தீய சிந்தனைகள், கொலை, விபசாரம், முறைகேடான பாலுறவு, களவு, பொய்ச்சாட்சி, அவதூறு ஆகியவை வெளிவருகின்றன.
அதற்கு அவர், "தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிற ஒருவன், அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறான். ஒரு பெண் தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் விபசாரம் செய்கிறாள்" என்றார்.
"தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்பவன், விபசாரம் செய்கிறான். விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணை யாராவது திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான்.
அவர்கள் இயேசுவிடம், "போதகரே, இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசேயின் சட்டத்தில் மோசே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நீர் என்ன சொல்கிறீர்?" என்றார்கள். இயேசுவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரும்படி, ஒரு சூழ்ச்சியாக அவர்கள் இந்தக் கேள்வியை கேட்டார்கள்.
ஆனால் இயேசுவோ, குனிந்து தமது விரலினால் தரையிலே எழுதத் தொடங்கினார். அவர்கள் தொடர்ந்து அவரைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததினால், இயேசு நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, "உங்களில் யாராவது பாவமில்லாதவன் இருந்தால், அவன் முதலாவதாக இவள்மேல் கல்லெறியட்டும்" என்றார். இயேசு மீண்டும் குனிந்து தரையில் எழுதினார்.
அப்பொழுது, இதைக் கேட்டவர்களில், முதியோர் தொடங்கி சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போகத் தொடங்கினார்கள். இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண்ணும் அங்கே நடுவே நின்றுகொண்டிருந்தாள். இயேசு நிமிர்ந்து அவளைப் பார்த்து, "மகளே, அவர்கள் எங்கே? ஒருவனும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லையோ?" என்று கேட்டார்.
அதற்கு அவள், "இல்லை ஆண்டவரே" என்றாள்.
அப்பொழுது இயேசு அவளிடம், "நானும் உன்னை குற்றவாளியாகத் தீர்க்கமாட்டேன். இப்பொழுது நீ போகலாம், இனிப் பாவம் செய்யாதே" என்றார்.
Armadilhas e consequências
Os lábios da mulher estranha destilam mel, mas o seu fim é amargo. Fuja da imoralidade — o adultério escraviza.
ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும்,
அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்;
ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும்,
இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள்.
அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன;
அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன.
அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை,
அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள்.
ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும்,
அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்;
ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும்,
இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள்.
அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன;
அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன.
அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை,
அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள்.
ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்;
நான் சொல்வதைவிட்டு விலகவேண்டாம்.
அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள்,
அவளுடைய வீட்டின் வாசலையும் மிதிக்கவேண்டாம்.
இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும்
உங்களுடைய வாழ்நாட்களை கொடூரர்களிடமும் இழந்துவிடுவீர்கள்;
அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள்,
அவளுடைய வீட்டின் வாசலையும் மிதிக்கவேண்டாம்.
இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும்
உங்களுடைய வாழ்நாட்களை கொடூரர்களிடமும் இழந்துவிடுவீர்கள்;
வேறுநாட்டைச் சேர்ந்தவர் உங்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள்,
உங்களுடைய கடும் உழைப்பு இன்னொருவனின் வீட்டைச் செல்வச் சிறப்பாக்கும்.
உங்களுடைய வாழ்க்கையின் முடிவில்,
உங்கள் தசையும் உடலும் நலியும்போது வேதனையால் புலம்புவீர்கள்.
அப்பொழுது நீங்கள், "ஐயோ, நான் அறிவுரையை வெறுத்தேனே,
திருத்தத்தை எனது இருதயம் அலட்சியம் செய்ததே!
நான் எனக்கு போதித்தவர்களுக்குக் கீழ்ப்படியவில்லையே,
எனக்கு அறிவுரை சொன்னவர்களுக்கு செவிகொடுக்கவில்லையே.
நான் இறைவனின் மக்கள் கூட்டத்தில்
தீராத பிரச்சனைக்குள்ளாகி விட்டேனே" என்று சொல்வீர்கள்.
அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக,
அவளுடைய மார்பகங்களே எந்நாளும் உன்னைத் திருப்தியாக்கட்டும்;
அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் கவரப்படுவாயாக.
என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்?
இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்?
அவளுடைய வீடு மரணத்திற்கு உன்னை வழிநடத்துகிறது,
அவளுடைய பாதைகள் மரித்தவர்களிடம் கூட்டிச்செல்கிறது.
அவளிடம் செல்பவர்கள் யாரும் திரும்புவதில்லை,
வாழ்வின் பாதைகளை அடைவதுமில்லை.
விபசாரியின் வாய் ஒரு ஆழமான குழி;
யெகோவாவின் கோபத்திற்கு உள்ளானவர்கள் அதில் போய் விழுவார்கள்.
முறைகேடான பாலுறவிலிருந்து விலகியோடுங்கள். மனிதன் செய்யும் மற்ற எல்லாப் பாவங்களும் அவனுடைய உடலுக்கு வெளியே இருக்கும்; ஆனால் பாலுறவுப் பாவங்களைச் செய்கிறவன், தன் சொந்த உடலுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறான்.
எனவே, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பரிசுத்த ஆவியானவருடைய வழிநடத்துதலின்படி வாழுங்கள். அப்பொழுது உங்கள் மாம்சத்தின்படி எழும் ஆசைகளைத் தீர்த்துக்கொள்வதில் ஈடுபடமாட்டீர்கள். ஏனெனில் மாம்ச இயல்பு, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கு முரண்பாடான ஆசைகளைத் தூண்டுகிறது. பரிசுத்த ஆவியானவரோ, மாம்ச இயல்புக்கு முரண்பட்ட விதத்திலேயே வழிநடத்துகிறார். அவை இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பாடாய் இருக்கின்றன. இதனாலேயே நீங்கள் விரும்புவதை உங்களால் செய்ய முடியாதிருக்கிறது.
மாம்ச இயல்பின் செயற்பாடுகள் வெளிப்படையானவை, அவையாவன: முறைகேடான பாலுறவு, அசுத்த பழக்கங்கள், காமவேட்கை; விக்கிரக வழிபாடு, மாந்திரீகம்; பகைமை, தகராறு, எரிச்சல் குணம், கோபம், சுயநலம், பிரிவினைகள், பேதங்கள், பொறாமை; குடிவெறி, களியாட்டம் போன்றவைகளே. நான் உங்களை முன்பு எச்சரித்ததுபோலவே இப்பொழுதும் எச்சரிக்கிறேன். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறவர்கள், இறைவனுடைய அரசில் உரிமை பெறுவதில்லை.
திருமணம் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டும். திருமணப்படுக்கை தூய்மையாக காக்கப்படவேண்டும். விபசாரத்திலும், முறைகேடான பாலுறவிலும் ஈடுபடுகிறவர்களை இறைவன் நியாயந்தீர்ப்பார்.
நீங்கள் பரிசுத்தமாய் இருக்கவேண்டும் என்பதே இறைவனின் சித்தம். நீங்கள் முறைகேடான பாலுறவுகளைத் தவிர்த்துக்கொண்டு, ஒவ்வொருவரும் தங்கள் உடலை பரிசுத்தமாயும் மதிப்புக்குரியதாயும் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவேண்டும். இறைவனை அறியாத, யூதரல்லாதவர்களைப்போல் காமவேட்கைகொள்ளாமல் இருக்கவேண்டும்;
விபசாரக்காரரே, உலகத்துடன்கொள்ளும் நட்பு இறைவனை பகைப்பது என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? உலகத்துடன் நட்புக்கொள்ள விரும்புகிற யாரும், இறைவனுக்கு பகைவனாகிறான்.
அவள் தன்னுடைய முறைகேடான பாலுறவுகளிலிருந்து மனந்திரும்புகிறதற்கு அவளுக்குக் கால அவகாசம் கொடுத்தேன். ஆனால் அவளோ மனந்திரும்ப விரும்பவில்லை. ஆகவே நான் அவளை நோயுடன் படுக்கையில் கிடக்கச் செய்வேன். அவளோடு விபசாரம் செய்கிறவர்கள், அவளுடைய வழிகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால், அவர்களையும் மகா உபத்திரவம் அடையச் செய்வேன்.