Fofoca
A fofoca destrói reputações e relacionamentos. A Bíblia condena severamente o murmúrio, a calúnia e a palavra maldosa, chamando o cristão a edificar com a boca.
O poder destrutivo
O homem perverso semeia contendas, e o que anda com fofocas separa amigos íntimos. A fofoca é veneno social.
வஞ்சகர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்,
கோள் சொல்கிறவர்கள் நெருங்கிய நண்பர்களையும் பிரித்துவிடுகிறார்கள்.
இறைவனற்றவர்கள் தம் வார்த்தையினால் தமது அயலாரை அழிக்கிறார்கள்;
ஆனால் நீதிமான்கள் அறிவினால் தப்பிக்கொள்கிறார்கள்.
புறங்கூறித் திரிகிறவர்கள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்;
ஆனால் நம்பகமானவர்கள் இரகசியத்தைக் காத்துக்கொள்வார்கள்.
பகையை மறைப்பவன் பொய்யன்;
அவதூறு பரப்புகிறவன் மூடன்.
Edificar com palavras
Não saia da boca nenhuma palavra torpe, mas só a que serve para edificação. Quem fala mal do irmão fala mal da lei.
தீமையான வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வெளியே புறப்படவேண்டாம். ஆனால் கேட்பவர்கள் பயனடையும்படி, அவர்களுடைய தேவைக்கு ஏற்றவாறு, வளர்ச்சி பெறுவதற்கு உதவியான வார்த்தைகளையே பேசுங்கள்.
குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள்,
நீதியானதைச் செய்கிறவர்கள்,
உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்;
தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள்,
தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள்,
மற்றவர்களை நிந்திக்காதவர்கள்;
"என் நிமித்தம் மனிதர் உங்களை இகழும்போதும், துன்புறுத்தும்போதும், உங்களுக்கு எதிராகப் பலவிதமான பொய்களைச் சொல்லி தீமைகளை விளைவிக்கும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள்.