Vaso
A metáfora do vaso é uma das mais belas da Bíblia. Assim como o oleiro molda o barro, Deus nos forma segundo seus propósitos, fazendo de nós vasos úteis para sua glória.
Nas mãos do oleiro
Deus é o Oleiro e nós somos o barro. Ele tem autoridade e sabedoria para nos moldar conforme sua vontade perfeita, e não devemos questionar sua obra.
இப்பொழுதும் யெகோவாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின்செயல்.
குயவனின் வீடு
யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப் போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினால் வனைந்துகொண்டிருந்தான். குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாத்திரம் அவன் கையிலே கெட்டுப்போனது; அப்பொழுது அதைச் சரியாக செய்வதற்கு, தன் பார்வைக்குச் சரியாக தோன்றுகிற விதத்தில் குயவன் அதைத் திரும்ப வேறு பாத்திரமாக வனைந்தான். அப்பொழுது யெகோவாவுடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்: இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று யெகோவா சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.
அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா? மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
மண்ணால் செய்யப்பட்டவைகளைப்போன்ற ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ, களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லமுடியுமோ? உன்னால் உருவாக்கப்பட்டவை: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ?
ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக கருதப்படலாமோ? உண்டாக்கப்பட்ட பொருள் தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்ட பொருள் தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ?
Vasos para honra
O cristão é chamado a ser um vaso de honra, purificado e preparado para toda boa obra. Nosso valor está em quem nos formou e no que carregamos.
ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்கள் மட்டுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களும் உண்டு; அவைகளில் சில மதிப்புமிக்கவைகளும், சில மதிப்பற்றவைகளும் ஆகும். ஆகவே, ஒருவன் இவைகளைவிட்டுத் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நல்ல செயல்களுக்கும் ஆயத்தம் செய்யப்பட்டதுமான மதிப்புமிக்கப் பாத்திரமாக இருப்பான்.
இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாகாமல், தேவனால் உண்டாகியிருக்கிறது என்று தெரியும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.
ஐயோ, தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற மகன்களாகிய சீயோன்,
குயவனுடைய கைவேலையான மண்பாத்திரங்களைப்போல நினைக்கப்படுகிறார்களே.
Moldados pela graça
Mesmo quando nos sentimos frágeis e imperfeitos, o poder de Deus se aperfeiçoa em nossa fraqueza. Ele nos restaura e nos renova continuamente.
உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும்,
என்னை அழிக்கிறீர்.
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும்,
என்னைத் திரும்பத் தூளாகப்போகச் செய்வீர் என்பதையும் நினைத்தருளும்.
நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம்
வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போல இருக்கும்.
மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரபலமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள்.