Publicidade

Salmos 120

ஆரோகண பாடல்.

1 என்னுடைய நெருக்கத்திலே யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன்;

அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

2 யெகோவாவே, பொய் உதடுகளுக்கும் வஞ்சகமாக பேசும் நாவுக்கும் என்னுடைய ஆத்துமாவைத் தப்புவியும்.

3 வஞ்சக நாவே, உனக்கு என்ன கிடைக்கும்?

உனக்கு என்ன செய்யப்படும்?

4 பலவானுடைய கூர்மையான அம்புகளும்,

சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும்.

5 ஐயோ, நான் மேசேக்கிலே வாழ்ந்தது போதும்,

கேதாரின் கூடாரங்கள் அருகில் குடியிருந்ததும் போதும்!

6 சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடம் என்னுடைய ஆத்துமா குடியிருந்ததும் போதும்!

7 நான் சமாதானத்தை நாடுகிறேன்;

அவர்களோ, நான் பேசும்போது போர்செய்ய முயற்சி செய்கிறார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-