Publicidade

Salmos 141

தாவீதின் பாடல்.

1 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்,

என்னிடத்திற்கு விரைந்துவாரும்;

நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது,

என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும்.

2 என்னுடைய விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும்,

என் கையுயர்த்துதல் மாலைநேரப் பலியாகவும் இருக்கட்டும்.

3 யெகோவாவே, என்னுடைய வாய்க்குக் காவல்வையும்;

என்னுடைய உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்.

4 அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி

என்னுடைய இருதயத்தைத்

துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்;

அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.

5 நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி,

என்னைக் கடிந்துகொள்ளட்டும்;

அது என்னுடைய தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்;

என்னுடைய தலை அதை நிராகரிப்பதில்லை;

அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்செய்வேன்.

6 அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து

தள்ளப்பட்டுபோகிறபோது,

என்னுடைய வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.

7 பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல,

எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.

8 ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே,

என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது;

உம்மை நம்பியிருக்கிறேன்;

என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்.

9 அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும்,

அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும்.

10 துன்மார்க்கர்கள் தங்களுடைய வலைகளில் அகப்படுவார்களாக;

நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_09-43-29-