Publicidade

Salmos 23

தாவீதின் பாடல்.

1 யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்;

நான் தாழ்ச்சி அடையமாட்டேன்.

2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து,

அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.

3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்

பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்;

ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்;

உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

5 என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி,

என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்;

என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது.

6 என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்;

நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_06-50-08-