Publicidade

Salmos 127

சாலொமோனின் ஆரோகண பாடல்.

1 யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால்,

அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்;

2 யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால்

காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண்.

3 நீங்கள் அதிகாலையில் எழுந்து,

நேரத்துடன் வேலைகளைச் செய்து,

வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்;

அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார்.

4 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்,

கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.

5 இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.

அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்;

அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-