Publicidade

Salmos 82

ஆசாபின் பாடல்.

1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்;

தெய்வங்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.

2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத் தீர்ப்புச்செய்து,

துன்மார்க்கர்களுக்கு முகதாட்சிணியம் செய்வீர்கள். (சேலா)

3 ஏழைக்கும் திக்கற்றபிள்ளைக்கும் நியாயஞ்செய்து,

சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.

4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து,

துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.

5 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்,

இருளிலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.

6 நீங்கள் தெய்வங்கள் என்றும்,

நீங்களெல்லோரும் உன்னதமான தேவனுடைய மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.

7 ஆனாலும் நீங்கள் மனிதர்களைப்போலச் செத்து,

உலகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்து போவீர்கள்.

8 தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்;

நீரே எல்லா தேசங்களையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_06-50-08-