Publicidade

Salmos 15

தாவீதின் பாடல்.

1 யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்?

யார் உம்முடைய பரிசுத்த மலையில் குடியிருப்பான்?

2 உத்தமனாக நடந்து, நீதியை நடத்தி,

மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.

3 அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும்,

தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும்,

தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

4 ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான். 5 தன்னுடைய பணத்தை வட்டிக்குக் கொடுக்காமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாக லஞ்சம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-22_10-02-25-