Publicidade

Salmos 4

தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது.

1 என் நீதியின் தேவனே, நான் கூப்பிடும்போது எனக்கு பதில்தாரும்;

நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்;

எனக்கு இரங்கி, என்னுடைய விண்ணப்பதைக் கேட்டருளும்.

2 மனுமக்களே, எதுவரைக்கும் என்னுடைய மகிமையை அவமானப்படுத்தி,

வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா)

3 பக்தியுள்ளவனைக் யெகோவா தமக்காகத் தெரிந்துகொண்டார் என்று அறியுங்கள்;

நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார்.

4 நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாமலிருங்கள்;

உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா)

5 நீதியின் பலிகளைச் செலுத்தி, யெகோவாமேல் நம்பிக்கையாக இருங்கள்.

6 எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்;

யெகோவாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும்.

7 அவர்களுக்குத் தானியமும் திராட்சைரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைவிட,

அதிக சந்தோஷத்தை என்னுடைய இருதயத்தில் கொடுத்தீர்.

8 சமாதானத்தோடு படுத்துக்கொண்டு தூங்குவேன்;

யெகோவாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாகத் தங்கச்செய்கிறீர்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_06-50-08-