Pular para o conteúdo
Publicidade

சங்கீதங்கள் 97

1 யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி,

திரளான தீவுகள் மகிழட்டும்.

2 மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது;

நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.

3 நெருப்பு அவருக்கு முன்சென்று,

சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது.

4 அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது;

பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.

5 யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது,

சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது.

6 வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது;

எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.

7 சிலைகளை வணங்கி,

விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக;

தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.

8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே,

உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள்.

9 யெகோவாவே, பூமி அனைத்திற்கும்

நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.

10 யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்;

அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி,

துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.

11 நீதிமானுக்காக வெளிச்சமும்,

செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.

12 நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து,

அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.