Publicidade

Salmos 29

தாவீதின் பாடல்.

1 தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;

கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

2 யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;

பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.

3 யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது;

மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்;

யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

4 யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது;

யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.

5 யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது;

யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.

6 அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும்,

சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.

7 யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.

8 யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்;

யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.

9 யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து,

காடுகளை வெளியாக்கும்;

அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும்

யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.

10 யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்;

யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.

11 யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்;

யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி,

அவர்களை ஆசீர்வதிப்பார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-