Publicidade

Salmos 24

தாவீதின் பாடல்.

1 பூமியும் அதின் நிறைவும்,

உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை.

2 ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி,

அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார். 3 யார் யெகோவாவுடைய மலையில் ஏறுவான்?

யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்?

4 கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து,

தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும்,

பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே.

5 அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும்,

தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான்.

6 இதுவே அவரைத் தேடி விசாரித்து,

அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா)

7 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;

நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.

8 யார் இந்த மகிமையின் இராஜா?

அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா;

அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே.

9 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்;

நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார்.

10 யார் இந்த மகிமையின் இராஜா?

அவர் சேனைகளின் யெகோவா;

அவரே மகிமையின் இராஜா (சேலா).

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-