Pular para o conteúdo
Publicidade

ஏசாயா 53:1-5

IRVTAM Indian Revised Version (IRV) - Tâmil

1 எங்கள் மூலமாகக் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? யெகோவாவுடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, செளந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 3 அவர் அசட்டைசெய்யப்பட்டவரும், மனிதரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு53:3 வியாதி அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைசெய்யப்பட்டிருந்தார்; அவரை ஒருபொருட்டாக எண்ணாமற்போனோம். 4 உண்மையாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று கருதினோம். 5 நம்முடைய மீறுதல்களின்காரணமாக அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களின்காரணமாக அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

Em outras traduções

  1. OTCVTAM Indian Tamil Contemporary Version

    1 எங்களுடைய செய்தியை விசுவாசித்தவன் யார்?

    யெகோவாவின் கரம் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது?

    2 யெகோவாவுக்கு முன்பாக அவர் ஒரு இளந்தளிரைப் போலவும்,

    வறண்ட நிலத்தில் வளரும் வேரைப் போலவும் வளர்ந்தார்.

    நம்மைக் கவரக்கூடிய அழகோ, மாட்சிமையோ அவரிடம் இருக்கவில்லை;

    அவருடைய தோற்றத்தில் நாம் விரும்பத்தக்க எதுவும் அவரில் காணப்படவில்லை.

    3 அவர் மனிதரால் இகழப்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்;

    அவர் துன்பத்தின் மனிதனாய்53:3 துன்பத்தின் மனிதனாய் அல்லது வியாதியில் வேதனையில் பங்குகொண்டவராய் இருந்தார்.

    அருவருப்புள்ள ஒருவனைக் கண்டு மனிதர் தம் முகத்தை மறைத்துக்கொள்வதுபோல்,

    அவர் இகழப்பட்டார், நாமும் அவரை மதிக்கவில்லை.

    4 உண்மையாகவே அவர் நமது வேதனைகளை ஏற்றுக்கொண்டு,

    நமது நோய்களையும் குறைகளையும் சுமந்தார்.

    அப்படியிருக்க, நாமோ அவர் தமக்காகவே இறைவனால் அடிக்கப்பட்டு,

    அவரால் தாக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டார் என எண்ணினோம்.

    5 ஆனால், அவரோ எங்கள் மீறுதல்களினிமித்தம் ஊடுருவக் குத்தப்பட்டார்,

    எங்கள் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்;

    நமக்கு சமாதானத்தைக் கொண்டுவந்த தண்டனை அவர்மேல் வந்தது,

    அவருடைய காயங்களினால் நாம் குணமாகிறோம்.

Direitos das traduções citadas

Estes versículos te tocaram? Ore agora!

+581 estão orando agora.

Junte-se à corrente de oração.