9 நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில்,
அந்த இடத்தில் அரியணைகள் அமைக்கப்பட்டன.
அதன் நடுவில் பூர்வீகத்திலுள்ளவர் அமர்ந்திருந்தார்.
அவரது உடை உறைந்த பனியைப்போல் வெண்மையாயிருந்தது.
அவருடைய தலைமயிர் தூய்மையான பஞ்சைப்போல் வெண்மையாய் இருந்தது.
அவரது அரியணை கொழுந்துவிட்டெரிகிற நெருப்பினால் சுடர் விட்டுக்கொண்டிருந்தது.
அதன் சக்கரங்கள் கொழுந்து விட்டெரிந்தன.