Publicidade

Jonas 2

1 யோனா மீனுக்குள்ளே இருந்து தனது இறைவனாகிய யெகோவாவிடம் மன்றாடினான். 2 அவன் சொன்னதாவது:

"என் துன்பத்தில் நான் என் யெகோவாவைக் கூப்பிட்டேன்,

நீர் எனக்குப் பதிலளித்தீர்;

பாதாளத்தின் ஆழங்களிலிருந்து உதவிவேண்டி கூப்பிட்டேன்,

நீர் எனது அழுகையைக் கேட்டீர்.

3 நீர் என்னை ஆழத்துக்குள் எறிந்தீர்,

நடுக்கடலின் ஆழத்தில் எறிந்தீர்,

நீர்ச்சுழிகள் என்னைச் சுற்றிலும் சுழன்றுபோயின;

உமது அலைகளும், அலையின் நுரைகளும்

என்மேல் புரண்டன.

4 ‘உமது முன்னிலையிலிருந்து

நான் துரத்தப்பட்டேன்.

இருந்தாலும், நான் திரும்பவும்

உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப்பார்ப்பேன்’ என்றேன்.

5 என்னை விழுங்கிய தண்ணீர் என்னைப் பயமுறுத்தியது,

ஆழம் என்னை சூழ்ந்துகொண்டது;

கடற்பாசிக்கொடிகள் என் கழுத்தைச் சுற்றிக்கொண்டன.

6 மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன்,

கீழேயுள்ள பூமி என்னை என்றென்றைக்குமாக அடைத்து வைத்தது.

ஆனால் என் இறைவனாகிய யெகோவாவே,

நீர் குழியிலிருந்து என் உயிரை மேலே கொண்டுவந்தீர்.

7 "யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில்

நான் உம்மையே நினைத்தேன்,

என் மன்றாட்டு மேலெழுந்து

உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது.

8 "சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்;

அவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கிருபையை இழந்துபோகிறார்கள்.

9 ஆனால், நானோ துதியின் சத்தத்தோடே

உமக்குப் பலியிடுவேன்.

நான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவேன்.

‘இரட்சிப்பு யெகோவாவிடமிருந்தே வருகிறது’ " என்றான்.

10 யெகோவா மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவை கரையில் கக்கிவிட்டது.

Veja também

Publicidade
Jonas
Ver todos os capítulos de Jonas
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-22_10-02-25-