27 அழிந்துபோகும் உணவுக்காக வேலைசெய்யவேண்டாம், நித்திய வாழ்வுவரை நிலைநிற்கும் உணவுக்காகவே வேலைசெய்யுங்கள். அதை மானிடமகனாகிய நான் உங்களுக்குக் கொடுப்பேன்; பிதாவாகிய இறைவன் என்மேலேயே தமது அங்கீகாரத்தின் முத்திரையைப் பதித்திருக்கிறார்" என்றார்.
28 அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், "இறைவனுடைய வேலையை நிறைவேற்ற நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டார்கள்.
29 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, "இறைவன் அனுப்பிய என்னை விசுவாசிப்பதே இறைவனுடைய வேலை" என்றார்.