16 யெகோவா சொல்வது இதுவே:
"வழியின் நாற்சந்திகளில் நின்று பாருங்கள்.
முன்னோர்களின் வழிகளைக் கேட்டு விசாரியுங்கள்.
நன்மையான வழி எங்கே என்று கேட்டு அதிலே நடவுங்கள்.
அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு ஆறுதல் கிடைக்கும்.
ஆனால் நீங்களோ, ‘நாங்கள் அதில் நடக்கமாட்டோம்’ என்றீர்கள்.