14 இயேசு அவர்களைக் கண்டபோது, "நீங்கள் போய் ஆசாரியர்களிடம் உங்களைக் காண்பியுங்கள்"17:14 லேவி. 14:2-32 என்றார். அப்படியே அவர்கள் போகும்போதே, சுகமடைந்தார்கள்.
15 அவர்களில் ஒருவன் தான் சுகமடைந்ததைக் கண்டபோது, உரத்த சத்தமாய் இறைவனைத் துதித்துக்கொண்டு திரும்பிவந்தான். 16 அவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான். அவனோ ஒரு சமாரியனாயிருந்தான்.
17 அப்பொழுது இயேசு, "பத்துப்பேரும் சுகமடைந்தார்கள் அல்லவா? மற்ற ஒன்பது பேர் எங்கே? 18 இந்த வெளிநாட்டானைத் தவிர, இறைவனுக்குத் துதி செலுத்துவதற்கு வேறு யாரும் திரும்பிவரக் காணோமே?" என்று கேட்டார். 19 பின்பு இயேசு அவனிடம், "நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைச் சுகப்படுத்தியது" என்று சொன்னார்.