Publicidade

Salmos 120

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1 நான் என் துன்பத்தில் யெகோவாவை நோக்கிக் கூப்பிடுகிறேன்;

அவர் எனக்குப் பதிலளிக்கிறார்.

2 யெகோவாவே,

பொய்ப் பேசுகிற உதடுகளிலிருந்தும்,

வஞ்சக நாவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்றும்.

3 வஞ்சக நாவே,

இறைவன் உனக்குச் செய்யப்போவது என்ன?

அதற்கு மேலும் உனக்கு என்னதான் கிடைக்கும்?

4 போர்வீரனின் கூர்மையான அம்புகளினாலும்,

சூரைச்செடிகளை எரிக்கும் நெருப்புத் தழல்களினாலும் அவர் உன்னைத் தண்டிப்பார்.

5 ஐயோ, எனக்குக் கேடு! நான் மேசேக்கிலே

வேறுநாட்டைச் சேர்ந்தவனாய் குடியிருக்கிறேனே;

கேதாரின் கூடாரங்களில் வாழ்கிறேனே!

6 சமாதானத்தை வெறுக்கிறவர்கள் மத்தியில்

நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று.

7 நான் சமாதானத்தை நாடுகிறேன்;

அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்தையே தேடுகிறார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-