Publicidade

Salmos 2

1 நாடுகள் ஏன் கொதித்து எழும்புகின்றன?

மக்கள் கூட்டம் ஏன் வீணாய் சூழ்ச்சி செய்கின்றார்கள்?

2 பூமியின் அரசர்கள் எதிர்த்து நிற்கிறார்கள்,

ஆளுநர்களும் யெகோவாவுக்கு விரோதமாகவும்,

அவரால் அபிஷேகம் செய்யப்பட்டவருக்கு விரோதமாகவும் ஒன்றுகூடி சொன்னதாவது:

3 "அவர்கள் இட்ட சங்கிலிகளை உடைத்து,

அவர்கள் கட்டிய கயிறுகளை அறுத்தெறிவோம்."

4 பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருப்பவர் சிரிக்கிறார்;

யெகோவா அவர்களை இகழ்கிறார்.

5 அவர் தமது கோபத்தில் அவர்களைக் கடிந்து,

தமது கடுங்கோபத்தில் அவர்களுக்குத் திகிலுண்டாகச் சொல்வதாவது:

6 "நான் எனது அரசனை

என் பரிசுத்த மலையாகிய சீயோனில் அமர்த்தியிருக்கிறேன்."

7 நான் யெகோவாவின் விதிமுறையைப் பிரசித்தப்படுத்துவேன்:

அவர் என்னிடம் சொன்னதாவது, "நீர் என்னுடைய மகன்;

இன்று நான் உமக்குத் தந்தையானேன்.

8 என்னிடம் கேளும்,

நான் நாடுகளை உம்முடைய உரிமைச் சொத்தாக்குவேன்,

பூமியை அதின் கடைசிவரை உமது உடைமையாக்குவேன்.

9 நீர் அவர்களை ஓர் இரும்புச் செங்கோலினால் உடைப்பீர்;

மண்பாண்டத்தை உடைப்பதுபோல்,

நீர் அவர்களை தூள்தூளாக நொறுக்கிப்போடுவீர்."

10 ஆகவே, அரசர்களே, நீங்கள் ஞானமுள்ளவர்களாய் இருங்கள்;

பூமியின் ஆளுநர்களே, நீங்கள் எச்சரிப்படையுங்கள்.

11 பயத்துடன் யெகோவாவை வணங்குங்கள்,

நடுக்கத்துடன் அவர் ஆளுகையில் மகிழ்ந்திருங்கள்.

12 இறைமகனை முத்தம் செய்யுங்கள், இல்லையென்றால் அவர் கோபங்கொள்வார்;

நீங்களும் உங்கள் வழியில் அழிவீர்கள்;

ஏனெனில் ஒரு நொடியில் அவருடைய கோபம் பற்றியெரியும்.

அவரிடத்தில் தஞ்சம் புகுந்த அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-15_21-32-39-