Publicidade

Salmos 99

1 யெகோவா ஆட்சி செய்கிறார்,

நாடுகள் நடுங்கட்டும்;

அவர் கேருபீன்களின் நடுவில் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்;

பூமி அதிரட்டும்.

2 சீயோனிலே யெகோவா பெரியவர்;

அவர் எல்லா நாடுகளுக்கும் மேலாக புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.

3 பெரியதும் பிரமிக்கத்தக்கதுமான உமது பெயரை அவர்கள் துதிக்கட்டும்;

அவர் பரிசுத்தமானவர்.

4 அரசர் வல்லமையுள்ளவர், அவர் நீதியை விரும்புகிறார்;

நீர் நியாயத்தை நிலைநாட்டியிருக்கிறீர்;

நீர் யாக்கோபில்

நீதியையும் நேர்மையானதையும் செய்திருக்கிறீர்.

5 நம் இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்துயர்த்தி,

அவருடைய பாதபடியிலே வழிபடுங்கள்;

அவர் பரிசுத்தமானவர்.

6 அவருடைய ஆசாரியருள் மோசேயும் ஆரோனும் இருந்தார்கள்;

அவருடைய பெயரைச் சொல்லி வழிபடுகிறவர்களில் சாமுயேலும் இருந்தான்;

அவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள்;

அவர் அவர்களுக்குப் பதிலளித்தார்.

7 அவர் மேகத்தூணிலிருந்து அவர்களோடு பேசினார்;

அவர் அவர்களுக்குக் கொடுத்த

அவருடைய நியமங்களையும் விதிமுறைகளையும் கைக்கொண்டார்கள்.

8 எங்கள் இறைவனாகிய யெகோவாவே,

நீர் அவர்களுடைய வேண்டுதலுக்குப் பதிலளித்தீர்;

இஸ்ரயேலருடைய தீயசெயல்களுக்காக நீர் அவர்களைத் தண்டித்த போதிலும்,

நீர் அவர்களுக்கு மன்னிக்கிற இறைவனாகவே இருந்தீர்.

9 நமது இறைவனாகிய யெகோவாவைப் புகழ்ந்து உயர்த்தி

அவருடைய பரிசுத்த மலையில் வழிபடுங்கள்;

ஏனெனில் நம் இறைவனாகிய யெகோவா பரிசுத்தமானவர்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-