Publicidade

Salmos 124

சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.

1 யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்:

2 மனிதர் நம்மை தாக்கும்போது

யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

3 அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது,

அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே;

4 வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே,

நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே,

5 பொங்கி வந்த வெள்ளம்

நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.

6 அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத

யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.

7 வேடனுடைய கண்ணியிலிருந்து

தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்;

கண்ணி அறுந்தது,

நாம் தப்பினோம்.

8 வானத்தையும் பூமியையும் படைத்தவரான

யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-