Publicidade

Salmos 24

தாவீதின் சங்கீதம்.

1 பூமியும் அதிலிருக்கும் ஒவ்வொன்றும் யெகோவாவினுடையவை,

உலகமும் அதில் வாழும் அனைவரும் அவருடையவர்கள்.

2 ஏனென்றால் அவர் பூமியைக் கடலின்மேல் நிறுவி,

தண்ணீரின்மேல் நிலைநிறுத்தினார்.

3 யெகோவாவினுடைய மலையில் ஏறத்தகுந்தவன் யார்?

அவருடைய பரிசுத்த இடத்தில் நிற்கத் தகுந்தவன் யார்?

4 சுத்தமான கைகளுடையவனும் தூய்மையான இருதயமுடையவனும்

தன் ஆத்துமாவை பொய்யானவைகளுக்கு ஒப்புக்கொடாதவனும்

பொய் சத்தியம் செய்யாதவனுமே.

5 அவர்கள் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவார்கள்,

தங்கள் இரட்சகரான இறைவனால் நியாயத்தைப் பெறுவார்கள்.

6 அவரைத் தேடுகிறவர்களின் சந்ததி இப்படிப்பட்டதே,

யாக்கோபின் இறைவனே, உமது முகத்தைத் தேடுகிறவர்கள் இவர்களே.

7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;

பூர்வீகக் கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்;

மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.

8 இந்த மகிமையின் அரசன் யார்?

அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா,

அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா.

9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்;

பூர்வீக கதவுகளே, நீங்கள் உயர்த்தப்படுங்கள்;

மகிமையின் அரசன் உட்செல்ல வழிவிடுங்கள்.

10 மகிமையின் அரசனான இவர் யார்?

அவர் சேனைகளின் யெகோவா;

அவரே மகிமையின் அரசன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-22_10-02-25-