Publicidade

Salmos 23

தாவீதின் சங்கீதம்.

1 யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார், எனக்கு ஒரு குறையும் ஏற்படாது.

2 அவர் என்னைப் பசுமையான புல்வெளிகளில் இளைப்பாறப் பண்ணுகிறார்,

அமைதியான நீர்நிலைகளின் அருகே என்னை வழிநடத்துகிறார்.

3 அவர் என் ஆத்துமாவுக்கு புத்துயிர் அளிக்கிறார்.

தமது பெயருக்காக அவர் என்னை,

நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

4 மரண நிழலின் பள்ளத்தாக்கின் வழியே

நான் நடந்தாலும்

நான் ஒரு தீமைக்கும் பயப்படமாட்டேன்,

ஏனென்றால், நீர் என்னுடன்கூட இருக்கிறீர்;

உமது கோலும் உமது தடியும்,

எனக்கு ஆறுதல் அளிக்கின்றன.

5 என் பகைவர்களின் சமுகத்தில்

நீர் எனக்கென ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணுகிறீர்.

நீர் என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்;

என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.

6 நிச்சயமாகவே என் வாழ்நாள் முழுவதும்

நன்மையும் அன்பும் என்னைத் தொடர்ந்து வரும்,

நான் யெகோவாவினுடைய வீட்டில்

என்றென்றுமாய் வாழ்வேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-22_10-02-25-