Publicidade

Salmos 3

தாவீது தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பி ஓடுகையில் பாடிய சங்கீதம்.

1 யெகோவாவே, என் பகைவர்கள் எத்தனை பேராய் இருக்கிறார்கள்!

எத்தனைபேர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்.

2 அநேகர் என்னைக்குறித்து,

"இறைவன் அவனை விடுவிக்கமாட்டார்" என்று சொல்கிறார்கள். மற்றும் 8 ஆவது வசனத்தின் பின் பகுதியிலும் வருகிறது.

3 ஆனால் யெகோவாவே, நீர் என்னைச் சுற்றிலும் கேடயமும்,

என் மகிமையும் என் தலையை உயர்த்துகிறவருமாய் இருக்கிறீர்.

4 நான் சத்தமிட்டு யெகோவாவைக் கூப்பிடுகிறேன்;

அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்குப் பதில் கொடுக்கிறார்.

5 நான் படுத்துக்கொண்டு உறங்குகிறேன்;

யெகோவா என்னைத் தாங்குவதால், நான் திரும்பவும் விழித்தெழுகிறேன்.

6 எல்லாப் பக்கங்களிலும் பதினாயிரம்பேர் எனக்கு விரோதமாய் நின்றாலும்,

நான் பயப்படமாட்டேன்.

7 யெகோவாவே, எழுந்தருளும்;

என் இறைவனே, என்னை விடுவியும்.

என் எதிரிகள் எல்லோரையும் கன்னத்தில் அடித்து,

கொடியவர்களின் பற்களை உடைத்துப்போடும்.

8 யெகோவாவிடமிருந்தே விடுதலை வருகிறது.

உம்முடைய ஆசீர்வாதம் உமது மக்களின்மேல் இருப்பதாக.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_10-32-54-