Publicidade

Salmos 15

தாவீதின் சங்கீதம்.

1 யெகோவாவே, உமது பரிசுத்த கூடாரத்தில் யார் வாழ்வான்?

உமது பரிசுத்த மலையில் யார் குடியிருப்பான்?

2 குற்றமற்றவர்களாய் நடக்கிறவர்கள்,

நீதியானதைச் செய்கிறவர்கள்,

உள்ளத்திலிருந்து உண்மையைப் பேசுகிறவர்கள்;

3 தம் நாவினால் அவதூறு பேசாதவர்கள்,

தம் தோழருக்கு அநியாயம் செய்யாதவர்கள்,

மற்றவர்களை நிந்திக்காதவர்கள்;

4 இழிவானவனை அவமதிப்பவர்கள்,

யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களைக் கனம்பண்ணுகிறவர்கள்;

ஆணையிட்டதினால் துன்பம் நேரிட்டாலும்

மனதை மாற்றாதவர்கள்;

5 ஏழைகளுக்குத் தம் பணத்தை வட்டியின்றிக் கடனாகக் கொடுப்பவர்கள்,

குற்றமற்றவர்களுக்கு விரோதமாக இலஞ்சம் வாங்காதவர்கள்.

இவ்வாறு வாழ்கிறவர்கள்

ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-