Publicidade

Salmos 142

தாவீது குகையிலிருந்தபோது செய்த ஜெபமாகிய மஸ்கீல் என்னும் சங்கீதம்.

1 நான் யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்;

நான் யெகோவாவிடம் இரக்கம் கேட்டு என் குரலை உயர்த்துகிறேன்.

2 அவருக்கு முன்பாக என் குறைகளைக் கொட்டுகிறேன்;

என் துன்பத்தையும் அவருக்கு முன்பாக சொல்கிறேன்.

3 என் ஆவி எனக்குள் சோர்ந்து போகையில்,

நீரே என் வழியை அறிகிறவர்;

நான் நடக்கும் பாதையில்

மனிதர்கள் எனக்குக் கண்ணியை மறைத்து வைத்திருக்கிறார்கள்.

4 நோக்கிப்பாரும், உதவிக்காக என் வலதுபக்கத்தில் யாரும் இல்லை;

என்னில் அக்கறை கொள்பவர்கள் யாருமில்லை.

எனக்குப் புகலிடம் இல்லை;

என்னைக் கவனிக்க எவருமில்லை.

5 யெகோவாவே, நான் உம்மை நோக்கிக் கதறுகிறேன்;

"நீரே என் புகலிடம்,

வாழ்வோரின் நாட்டில் நீரே என் பங்கு" என்று நான் சொல்கிறேன்.

6 என் கதறலுக்குச் செவிகொடும்;

நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்;

என்னைப் பிடிக்க பின்தொடர்கிறவர்களிடமிருந்து என்னை விடுவியும்;

ஏனெனில் அவர்கள் என்னைவிட பலமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

7 நான் உமது பெயரைத் துதிக்கும்படி,

என் சிறையிலிருந்து என்னை விடுதலையாக்கும்;

அப்பொழுது நீர் எனக்குச் செய்யும் நன்மையினிமித்தம்,

நீதிமான்கள் என்னைச் சுற்றிச் சேர்ந்துகொள்வார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-