Publicidade

Salmos 29

தாவீதின் சங்கீதம்.

1 பரலோகவாசிகளே, யெகோவாவை கனம்பண்ணுங்கள்;

அவருடைய மகிமைக்காகவும் வல்லமைக்காகவும் யெகோவாவை கனம்பண்ணுங்கள்.

2 யெகோவாவினுடைய பெயருக்குரிய மகிமைக்காக கனம்பண்ணுங்கள்;

பரிசுத்த அலங்காரத்துடன் யெகோவாவை வழிபடுங்கள்.

3 யெகோவாவினுடைய குரல் வெள்ளத்தின்மேல் ஒலிக்கிறது;

மகிமையின் இறைவன் முழங்குகிறார்;

பெருவெள்ளத்தின்மேல் யெகோவா முழங்குகிறார்.

4 யெகோவாவினுடைய குரல் வல்லமையுள்ளது;

யெகோவாவினுடைய குரல் மாட்சிமை பொருந்தியது.

5 யெகோவாவினுடைய குரல் கேதுரு மரங்களை உடைக்கிறது;

யெகோவா லெபனோனின் கேதுரு மரங்களைத் துண்டுகளாக உடைக்கிறார்.

6 அவர் லெபனோனை ஒரு கன்றுக்குட்டியைப் போலவும்,

சிரியோன் மலையை ஒரு இளம் காட்டெருதைப் போலவும் துள்ளப்பண்ணுகிறார்.

7 யெகோவாவினுடைய குரல்

மின்னல் கீற்றுகளுடன் பளிச்சிடுகிறது.

8 யெகோவாவினுடைய குரல் பாலைவனத்தை நடுங்கச் செய்கிறது;

காதேஷின் பாலைவனத்தை யெகோவா அதிரப்பண்ணுகிறார்.

9 யெகோவாவினுடைய குரல் கர்வாலி மரங்களை முறிக்கிறது.

காடுகளை அழித்து வெளியாக்குகிறது;

அவருடைய ஆலயத்திலோ அனைவரும், "மகிமை!" என அறிவிக்கிறார்கள்.

10 யெகோவா வெள்ளத்தின்மேல் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்;

யெகோவா என்றென்றும் அரசனாக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

11 யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுக்கிறார்;

யெகோவா தமது மக்களை சமாதானத்தால் ஆசீர்வதிக்கிறார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-