Publicidade

Salmos 146

1 யெகோவாவைத் துதி.

என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி.

2 நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைத் துதிப்பேன்;

நான் உயிரோடிருக்கும்வரை என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.

3 உன் நம்பிக்கையை இளவரசர்களிலும்,

உன்னை மீட்கமுடியாத மனுமக்களிலும் வைக்காதே.

4 அவர்களுடைய ஆவி பிரியும்போது அவர்கள் மண்ணுக்கே திரும்பிப் போவார்கள்;

அந்த நாளிலேயே அவர்களுடைய திட்டங்கள் ஒன்றுமில்லாமல் போகும்.

5 யாக்கோபின் இறைவனைத் தங்கள் உதவியாகக் கொண்டிருப்போர்,

தங்களுடைய இறைவனாகிய யெகோவாவிடம்

நம்பிக்கையை வைத்திருப்போர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

6 அவரே வானத்தையும் பூமியையும்

கடலையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தவர்;

யெகோவாவாகிய அவர் என்றைக்கும் உண்மையுள்ளவராய் இருக்கிறார்.

7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்;

பசியுள்ளவர்களுக்கு உணவு கொடுக்கிறார்.

யெகோவா கைதிகளை விடுதலையாக்குகிறார்,

8 யெகோவா குருடருக்குப் பார்வை கொடுக்கிறார்,

யெகோவா தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துகிறார்,

யெகோவா நீதிமான்களில் அன்பாயிருக்கிறார்.

9 யெகோவா அயல்நாட்டவர்களைப் பாதுகாக்கிறார்,

அநாதைகளையும் விதவைகளையும் ஆதரிக்கிறார்,

ஆனால் கொடியவர்களின் வழிகளை அவர் முறியடிக்கிறார்.

10 யெகோவா என்றென்றும் ஆளுகை செய்கிறார்;

சீயோனே, உன் இறைவன் எல்லாத் தலைமுறைகளுக்கும் அரசாளுகிறார்.

யெகோவாவைத் துதி.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-