Publicidade

Salmos 82

ஆசாபின் சங்கீதம்.

1 மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்;

"கடவுள்களுக்கு" நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்:

2 "நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி,

கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்?

3 பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்;

ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள்.

4 பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்;

அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள்.

5 "அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்;

அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்;

பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன.

6 " ‘நீங்கள் "தெய்வங்கள்" என்றும்;

நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன்.

7 ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்;

மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்."

8 இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்;

ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-19_11-20-24-