Publicidade

Salmos 92

ஓய்வுநாளுக்கான பாடலாகிய சங்கீதம்.

1 யெகோவாவைத் துதிப்பதும், உன்னதமானவரே,

உமது பெயரைப் புகழ்ந்து பாடுவதும் நல்லது.

2 காலையிலே உமது அன்பையும்

இரவிலே உமது உண்மையையும் அறிவிப்பது நல்லது.

3 பத்து நரம்பு வீணையின் இசையினாலும்,

யாழின் ஓசையினாலும் அதை அறிவிப்பது நல்லது.

4 யெகோவாவே, நீர் உமது செயல்களினால் என்னை மகிழ்ச்சியாக்குகிறீர்;

உமது கைகளின் வேலைகளினிமித்தம் நான் மகிழ்ந்து பாடுகிறேன்.

5 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு பெரிதானவை,

உம்முடைய யோசனைகள் எவ்வளவு ஆழமானவை!

6 உணர்வற்ற மனிதன் அறியாததும்,

மூடர் விளங்கிக்கொள்ளாததும் இதுவே,

7 கொடியவர்கள் புல்லைப்போல் முளைத்தாலும்,

தீங்கு செய்கிறவர்கள் எல்லோரும் செழித்தாலும்,

என்றென்றைக்கும் அழிந்துபோவார்கள்.

8 ஆனாலும் யெகோவாவே, நீர் என்றென்றுமாய் புகழ்ந்து உயர்த்தப்படுகிறீர்.

9 யெகோவாவே, உமது பகைவர்,

நிச்சயமாகவே உம்முடைய பகைவர் அழிந்தேபோவார்கள்;

தீமை செய்வோர் எல்லோருமே சிதறடிக்கப்படுவார்கள்.

10 காட்டெருதின் பெலத்தைப்போல் நீர் என் பெலத்தை உயர்த்துவீர்;

சிறந்த எண்ணெய் என்மேல் ஊற்றப்பட்டன.

11 என் விரோதிகளின் தோல்வியைக் கண்ணாரக் கண்டேன்;

என் செவிகள் என் கொடிய எதிரிகள் முறியடிக்கப்படுவதைக் காதாரக் கேட்டேன்.

12 நீதிமான்கள் பனைமரத்தைப்போல் செழிப்பார்கள்,

அவர்கள் லெபனோனின் கேதுரு மரம்போல் வளர்வார்கள்;

13 அவர்கள் யெகோவாவினுடைய வீட்டிலே நாட்டப்பட்டு,

நமது இறைவனுடைய ஆலய முற்றங்களில் செழிப்பார்கள்.

14 அவர்கள் செழுமையும் பசுமையுமாயிருந்து,

தங்கள் முதிர்வயதிலும் கனி கொடுப்பார்கள்.

15 "யெகோவா நீதியுள்ளவர்; அவரே என் கன்மலை;

அவரிடத்தில் அநீதி இல்லை" என்று அவர்கள் பிரசித்தப்படுத்துவார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-