Publicidade

Salmos 47

கோராகின் மகன்களிலுள்ள பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.

1 நாடுகளே, நீங்கள் எல்லோரும் உங்கள் கைகளைத் தட்டுங்கள்;

மகிழ்ச்சியின் சத்தத்துடன் ஆர்ப்பரித்து இறைவனைத் துதியுங்கள்.

2 உன்னதமானவராகிய யெகோவா அச்சத்திற்கு உரியவர்,

அவர் பூமி முழுவதற்கும் மகா அரசர்.

3 அவர் மக்களை நமக்குக் கீழ்ப்படுத்தினார்,

மக்கள் கூட்டத்தை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினார்.

4 இறைவன் தமக்கு அன்பான யாக்கோபியரை,

தமது உரிமைச்சொத்தாக தேர்ந்தெடுப்பார்.

5 இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்;

யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர்த்தப்பட்டிருக்கிறார்.

6 இறைவனுக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்;

நமது அரசருக்குத் துதிகளைப் பாடுங்கள், துதிகளைப் பாடுங்கள்.

7 ஏனெனில் இறைவனே பூமி முழுவதற்கும் அரசராய் இருக்கிறார்;

அவருக்குத் துதியின் சங்கீதத்தைப் பாடுங்கள்.

8 இறைவன் நாடுகளுக்கு மேலாக ஆளுகை செய்கிறார்;

அவர் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.

9 மக்களின் தலைவர்கள்,

ஆபிரகாமின் இறைவனுடைய மக்களாக ஒன்றுகூடுகிறார்கள்.

ஏனெனில் பூமியின் அரசர்கள் இறைவனுக்கே உரியவர்கள்;

அவர் மிகவும் புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-