Publicidade

Salmos 149

1 யெகோவாவைத் துதியுங்கள் லும் உள்ளது..

யெகோவாவுக்கு ஒரு புதுப்பாட்டைப் பாடுங்கள்,

பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதியைப் பாடுங்கள்.

2 இஸ்ரயேலர் தங்களைப் படைத்தவரில் மகிழட்டும்;

சீயோனின் மக்கள் தங்கள் அரசரில் களிகூரட்டும்.

3 அவர்கள் யெகோவாவினுடைய பெயரை நடனத்தோடு துதிக்கட்டும்,

தம்புராவினாலும் யாழினாலும் அவருக்கு இசை மீட்டட்டும்.

4 ஏனெனில் யெகோவா தம்முடைய மக்களில் மகிழ்ச்சியாயிருக்கிறார்;

தாழ்மையுள்ளவர்களை அவர் இரட்சிப்பினால் முடிசூட்டுகிறார்.

5 பரிசுத்தவான்கள் இந்த மகிமையில் களிகூர்ந்து

தங்கள் படுக்கைகளில் மகிழ்ச்சியுடன் பாடுவார்கள்.

6 அவர்களுடைய வாய்களில் இறைவனின் துதியும்,

கைகளில் இருபக்கமும் கூர்மையுள்ள வாளும் இருப்பதாக.

7 அவைகளினால் நாடுகளைப் பழிவாங்கவும்,

மக்கள் கூட்டத்தைத் தண்டிக்கவும்,

8 அவர்களுடைய அரசர்களைச் சங்கலிகளாலும்,

அவர்களுடைய அதிகாரிகளை இரும்பு விலங்குகளினாலும் கட்டவும்,

9 அவர்களுக்கு விரோதமாக எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை

நடைமுறைப்படுத்தவும் அவை இருப்பதாக.

இதுவே அவருடைய எல்லா பரிசுத்தவான்களுக்கும் உரிய மகிமை.

யெகோவாவைத் துதியுங்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-