Publicidade

Salmos 128

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1 யெகோவாவுக்கு பயந்து அவருடைய வழிகளில் நடக்கும்

அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

2 உன் உழைப்பின் பலனை நீ சாப்பிடுவாய்;

ஆசீர்வாதங்களும் செல்வச் செழிப்பும் உன்னுடையவைகளாகும்.

3 உன் மனைவி உன் வீட்டிற்குள்

கனி நிறைந்த திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்;

ஒலிவமரத்தைச் சுற்றித் தளிர்கள் இருப்பதுபோல்,

உன் பிள்ளைகள் உன் பந்தியிலே உன்னைச் சுற்றி இருப்பார்கள்.

4 ஆம், யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற மனிதன்

இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுகிறான்.

5 யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக;

உன் வாழ்நாட்களெல்லாம்

எருசலேமின் செழிப்பை நீ காண்பாயாக.

6 நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளைக் காணும்வரை வாழ்ந்திருப்பாயாக;

இஸ்ரயேலின்மீது சமாதானம் இருப்பதாக.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-