Publicidade

Salmos 16

மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம்.

1 இறைவனே, என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்,

ஏனெனில் நான் உம்மில் தஞ்சம் அடைகிறேன்.

2 நான் யெகோவாவிடம், "நீரே என் யெகோவா;

உம்மைத்தவிர என்னிடம் ஒரு நன்மையும் இல்லை" என்று சொன்னேன்.

3 நாட்டிலுள்ள பரிசுத்தவான்கள், "அவர்கள் சிறந்தவர்கள்

என் மகிழ்ச்சி எல்லாம் அவர்களிலேயே இருக்கின்றன."

4 பிற தெய்வங்களைத் தேடி ஓடுகிறவர்களுக்கு துயரங்கள் அதிகரிக்கும்.

இரத்தபான காணிக்கைகளை அந்த தெய்வங்களுக்கு நான் ஊற்றமாட்டேன்;

அவைகளின் பெயர்களை என் உதடுகளினால் சொல்லவு மாட்டேன்.

5 யெகோவாவே, நீரே எனது சுதந்திரம், ஆசீர்வாதத்தின் பாத்திரமுமாய் இருக்கிறீர்;

எனது பங்கை பாதுகாப்பானதாய் ஆக்கியிருக்கிறீர்.

6 எனக்கான எல்லைப் பகுதிகள் இன்பமான இடங்களில் அமைந்துள்ளன;

நிச்சயமாகவே மகிழ்ச்சியான உரிமைச்சொத்து எனக்கு உண்டு.

7 எனக்கு ஆலோசனை தருகின்ற யெகோவாவை நான் துதிப்பேன்;

இரவிலும் என் இருதயம் எனக்கு அறிவைப் புகட்டுகிறது.

8 யெகோவாவையே எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்.

அவர் என்னுடைய வலதுபக்கத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படமாட்டேன்.

9 ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது;

என் உடலும் பாதுகாப்பாய் இளைப்பாறும்.

10 ஏனென்றால் நீர் என்னை பாதாளத்தில் கைவிட்டுவிடமாட்டீர்;

உமது பரிசுத்தவான் அழிவைக் காணவும் விடமாட்டீர்.

11 வாழ்வின் பாதையை நான் அறியப்பண்ணினீர்;

உமது சமுகத்தில் என்னை ஆனந்தத்தாலும்,

உமது வலதுபக்கத்தில் என்னை நித்திய இன்பங்களினாலும் நிரப்புவீர்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-