Publicidade

Salmos 61

கம்பியிசைக் கருவிகளுடன் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1 என் இறைவனே, என் கதறுதலைக் கேளும்,

என் மன்றாட்டுக்குச் செவிகொடும்.

2 பூமியின் கடைசிகளில் இருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;

என் இருதயம் சோர்ந்து போகையில் உம்மைக் கூப்பிடுகிறேன்;

என்னைப் பார்க்கிலும் உயரமான கற்பாறையினிடத்திற்கு என்னை வழிநடத்தும்.

3 நீரே என் புகலிடமாய் இருக்கிறீர்;

பகைவருக்கு எதிரான பலமுள்ள கோபுரமாய் இருக்கிறீர்.

4 நான் என்றென்றும் உமது கூடாரத்தில் குடியிருப்பேன்;

உமது சிறகுகளின் அடைக்கலத்தில் தஞ்சமடைவேன்.

5 இறைவனே, நீர் என் நேர்த்திக்கடன்களைக் கேட்டிருக்கிறீர்;

உமது பெயருக்குப் பயந்து நடக்கிறவர்களுக்குரிய உரிமைச்சொத்தை

நீர் எனக்குத் தந்திருக்கிறீர்.

6 அரசனின் வாழ்நாட்களை அதிகமாக்கும்;

அவனுடைய வருடங்களை தலைமுறை தலைமுறைகளாக அதிகமாக்கும்.

7 இறைவனின் சமுகத்தில் அவன் என்றைக்கும் சிங்காசனத்தில் அமர்ந்திருப்பானாக;

அவனைப் பாதுகாப்பதற்காக உமது உடன்படிக்கையின் அன்பையும்

உண்மையையும் நியமித்தருளும்.

8 அப்பொழுது நான் என்றென்றைக்கும் உமது பெயருக்குத் துதி பாடுவேன்;

நாள்தோறும் எனது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-