Publicidade

Salmos 111

1 அல்லேலூயா,

நீதிமான்களின் கூட்டத்திலும் சபையிலும்

நான் முழு இருதயத்தோடும் யெகோவாவைப் புகழ்வேன்.

2 யெகோவாவின் செயல்கள் மகத்தானவை;

அவைகளால் மகிழ்ச்சியடையும் எல்லோராலும் அவை சிந்திக்கப்படுகின்றன.

3 அவருடைய செயல்கள் மகிமையும், மகத்துவமுமானவை;

அவருடைய நீதி என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது.

4 அவர் தமது அதிசய செயல்களை நமது நினைவை விட்டு விலகாதபடிச் செய்திருக்கிறார்;

யெகோவா கிருபையும், கருணையும் உள்ளவராய் இருக்கிறார்.

5 அவர் தமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு உணவு கொடுக்கிறார்;

அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் வைத்திருக்கிறார்.

6 அவர் பிற நாடுகளைத் தம் மக்களுக்குக் கொடுத்து,

தமது வல்லமையை அவர்களுக்குக் காண்பித்திருக்கிறார்.

7 அவருடைய கரங்களின் செயல்கள் உண்மையும் நீதியுமானவை;

அவருடைய ஒழுங்குவிதிகள் அனைத்தும் நம்பத்தகுந்தவை.

8 அவை என்றென்றும் உறுதியானவை;

உண்மையுடனும், நேர்மையுடனும் கொடுக்கப்பட்டவை.

9 அவர் தமது மக்களுக்கு மீட்பைக் கொடுத்தார்;

அவர் தம் உடன்படிக்கையை என்றென்றுமாய் நியமித்திருக்கிறார்;

பரிசுத்தமும் மற்றும் பயபக்தி என்பது அவருடைய பெயராயிருக்கிறது.

10 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்;

அவருடைய ஒழுங்குவிதிகளைப் பின்பற்றும் அனைவருக்கும் நற்புத்தியுண்டு.

நித்தியமான துதி அவருக்கே உரியது.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-