Publicidade

Salmos 122

சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.

1 "யெகோவாவின் ஆலயத்திற்கு நாம் போவோம்"

என்று என்னிடம் சொன்னவர்களோடு சேர்ந்து நான் மகிழ்ச்சியடைந்தேன்.

2 எருசலேமே, எங்கள் கால்கள்

உன் வாசல்களில் நிற்கின்றன.

3 நெருக்கமாய் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பட்டணத்தைப்போல்,

எருசலேம் கட்டப்பட்டிருக்கிறது.

4 யெகோவாவினுடைய பெயரைத் துதிப்பதற்கு,

கோத்திரங்கள் அங்கு போவார்கள்;

இஸ்ரயேலுக்குக் கொடுக்கப்பட்ட நியமத்தின்படி,

யெகோவாவினுடைய கோத்திரங்கள் அங்கு போவார்கள்.

5 தாவீதின் குடும்ப வரிசையின் சிங்காசனங்கள் உள்ளன;

அங்கே மக்கள் நியாயம் தீர்க்கப்படுகிறார்கள்.

6 எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள்:

"உன்னை நேசிப்பவர்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள்.

7 உன் மதில்களுக்குள் சமாதானமும்,

உன் கோட்டைகளுக்குள் பாதுகாப்பும் இருப்பதாக."

8 என் குடும்பத்தின் நிமித்தமும், என் சிநேகிதர்கள் நிமித்தமும்

"உனக்குள் சமாதானம் இருக்கட்டும்" என்று நான் வாழ்த்துகிறேன்.

9 எங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயம் அங்கு இருப்பதால்,

நான் உன் செழிப்பைத் தேடுவேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-